
உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட் : நன்றி சொன்ன ரஜினி
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. நேற்று நடிகர் ரஜினிகாந்தும் இந்த டிக்கெட்டை பெற்றார். அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கினார்.
இந்நிலையில் டிக்கெட் பெற்ற ரஜினி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛2023 ஐசிசி உலக கோப்பை தொடருக்காக பிசிசி-யிடமிருந்து மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பிசிசிஐக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புள்ள ஜெய்ஷா ஜி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி,"" என பதிவிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!