
ஜெயிலர் படத்தில் சம்பளம் எவ்வளவு? மனம் திறந்த விநாயகன்
இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் அவர்களை விட பெயரை தட்டி சென்றவர் நடிகர் விநாயகன் தான். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பெரிய அளவில் எங்கேயும் பேட்டிகளில் முகம் காட்டாமல் இருந்த விநாயகன், சமீபத்தில் ஒரு வீடியோ மூலமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது சில சேனல்களில் பேட்டியளித்து வருகிறார் விநாயகன்.
அப்படி ஒரு சேனலில் அவர் கூறும்போது, “இந்த படத்திற்காக எனக்கு 35 லட்சம் சம்பளம் தரப்பட்டதாக ஒரு தவறான தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைவிட மூன்று மடங்கு சம்பளம் எனக்கு கொடுக்கப்பட்டது. அது நானே கேட்ட தொகை தான். அதைக் கொடுத்ததோடு படப்பிடிப்பில் எனக்கு ராஜ மரியாதையும் கிடைத்தது. ஒரு படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலம் பணியாற்றியது என்றால் அது இந்த படத்தில் தான். அது மட்டுமல்ல படத்தில் அதிக நேரம் வரும் விதமாக நான் நடித்ததும் ஜெயிலர் படம் தான். இனி வரும் நாட்களில் கதைகளை செலெக்ட்டிவாக தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!