
அ - அ - அ கூட்டணி உருவாகுமா ?
இந்திய அளவில் பல சினிமா பிரபலங்கள் "ஜவான்" கூட்டணியை வாழ்த்தி வருகிறார்கள். அவர்களில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனும் ஒருவர். ஷாரூக், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, அட்லீ, அனிருத் என ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் குறிப்பிட்டு நீளமான பதிவொன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த அனிருத், "நன்றி எனது சகோதரரே” என்றார். அதற்கு அல்லு அர்ஜுன், “வெறும் நன்றி மட்டும் சொல்லக் கூடாது, எனக்கு சிறந்த பாடல்களும் வேண்டும்,” என்று பதிலளித்தார். அதற்கு "ரெடி" என அனிருத் கூறியுள்ளார்.
இந்த உரையாடல் மூலம் "புஷ்பா 2" படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை அட்லீ தான் இயக்க உள்ளார். அதற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அதனால், "அ-அ-அ" கூட்டணி, அதாவது அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் கூட்டணி உருவாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!