
செல்வராகனுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த த்ரிஷா
அப்படம் பற்றி 2013ம் ஆண்டு செல்வராகவன் ஒரு டுவீட் போட்டிருந்தார். அதில், “"ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே" படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். வெங்கடேஷ், த்ரிஷா ஆகியோருடன் வேலை பார்த்தது சிறப்பானது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயார்,” என அப்போது குறிப்பிட்டுள்ளார்.
அந்த டுவீட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு “நான் ரெடி, செல்வராகவன்” என பதிலளித்துள்ளார் த்ரிஷா. டுவிட்டர் தளத்தில் இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு ஒருவர் பதிலளித்த டுவீட் இதுவாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷாவின் இந்தப் பதிலுக்குப் பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!