
உங்களில் பாதி ஆவேன் : துல்கர் சல்மான் தந்தைக்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து
அவர் தனது வாழ்த்து பதிவில் “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன் முறையாக கேமரா முன்னால் நின்றபோது உங்களைப் போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதாவது என் வாழ்நாளில் நீங்கள் படைத் சாதனைகளில் பாதியையாவது நான் படைத்து விடுவேன் என்கிற பொருள்படும்படியான இந்த பதிவு துல்கர் தந்தை மீது கொண்டிருக்கும் அன்பு. தன் மீது கொண்டிருக்கும் தன்னம்பிக்கை இவற்றை குறிப்பதாக பலரும் துல்கரை பாராட்டி வருகிறார்கள். இந்த பதிவுடன் தந்தையுடன் நிற்கும் கருப்பு வெள்ளை படத்தையும் துல்கர் வெளியிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!