
நிஜ சந்திரமுகியே நான் தான் - கங்கனா
கங்கனா அளித்த பேட்டி : ‛‛பி வாசு என்னிடம் வேறு ஒரு கதையை முதலில் சொன்னார். பின் இந்தபடம் பற்றி சொன்னதும் சம்மதம் சொன்னேன். சந்திரமுகி 1 படம் பார்த்தவர்கள் நிச்சயம் என்னை ஜோதிகாவுடன் ஒப்பிடுவார்கள். நான் அவரை இதுவரை பார்த்தது இல்லை. அவரது ரசிகை நான். ஒருமுறை என்னை பற்றி ஒரு பேட்டியில் பேசி இருந்தார். ஆனால் அப்போது நான் சந்திரமுகியில் நடிக்கவில்லை. அவரது வார்த்தைகளுக்கு நன்றி. நிஜ சந்திரமுகியே நான் தான். லக்ஷ்மி என்ற ரோலில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு நிறைய டான்ஸ் இருக்கு. கிளைமாக்ஸ் நிச்சயம் அதிர்ச்சி தரும்"" என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!