தமிழ்நாட்டில் மட்டும் குஷி படத்தின் வசூல் எவ்வளவு?
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் மட்டும் குஷி படத்தின் வசூல் எவ்வளவு?
செப் 05, 2023
அ நிறம் | அளவு
Advertisement
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்து வெளிவந்த திரைப்படம் "குஷி". மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாகப் இசையமைத்து இருந்தார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி அன்று வெளிவந்த இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழகமெங்கும் 200 தியேட்டர்களுக்கு மேல் தமிழ் பதிப்பில் வெளியானது. இந்த நிலையில் முதல் மூன்று நாட்களில் தமிழகளவில் ரூ. 4.7 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்த குஷி படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!