
குஷி - முதல் நாளில் 30 கோடி வசூல் என அறிவிப்பு
இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்றைய முதல் நாளில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் 30 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கில் மட்டும் 16 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 52 கோடி வரை வியாபாரம் நடந்துள்ள இப்படத்தின் முதல் நாள் வசூலே 30 கோடி என்பதால் இப்படம் நிச்சயம் லாபகரமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் தேவரகொண்டாவின் சினிமா வரலாற்றில் முதல் நாள் வசூலாக இந்தப் படம்தான் அதிக வசூலித்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!