
ஜெயிலர் - ரஜினிக்கு இவ்வளவு வருமானமா ?
ஆக, மொத்தம் "ஜெயிலர்" படத்திற்காக மொத்தமாக 220 கோடி ரூபாய் ரஜினிகாந்திற்கு வருமானம் என்கிறார்கள். இதனால், இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அவரது ரசிகர்களின் கருத்து. இதற்கு முன்பு கூட ரஜினிகாந்த், தான் நடிக்கும் படங்களின் சம்பளத்துடன் சேர்த்து சில குறிப்பிட்ட ஏரியாக்களின் வினியோக உரிமையையும் பெற்றுள்ளார். அதன் மூலம் கணிசமான தொகை அவருக்குக் லாபமாகக் கிடைத்திருக்கிறது.
மேலும், ரஜினிக்கு வழங்கப்பட்ட காரின் மதிப்பும் சுமார் ஒன்றரை கோடி என்கிறார்கள். இதுவரையிலும் இப்படி ஒரு பரிசை ரஜினி யாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் கூடுதல் தகவல்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!