
சிவகார்த்திகேயனின் 21வது படம்: முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "மீண்டும் சந்திப்போம், காஷ்மீர், எங்களை பாதுகாத்ததற்கு நன்றி. இந்த 75 நாட்கள் படப்பிடிப்பும் கனவு போல இருக்கிறது. படக்குழு அயராத உழைப்பும், காஷ்மீர் காவல்துறை, கமல்ஹாசன், எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆகியோரது ஆதரவும்தான் இதனை சாத்தியமாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார். அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!