
புதிய ஹேர் ஸ்டைலுக்கு மன்னிப்பு கேட்ட குஷ்பு
இந்த புதிய ஹேர்ஸ்டைல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது: நான் தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டதாக நினைத்து நிறைய பேர் எனக்கு குறுந்தகவல்கள் அனுப்பினர். நான் அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். எனது புதிய படத்தின் தோற்றத்துக்காக அப்படி குட்டையான தலைமுடி வைத்து பார்க்கப்பட்டது. தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று எழுதியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!