
“விக்ரம், ஜெயிலர்” வசூல் சாதனை : புதிதாக எழுந்த கார் சர்ச்சை
ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மற்றுமொரு பெரிய வெற்றியாக ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான "ஜெயிலர்" படம் அமைந்துள்ளது. இளம் இயக்குனரான நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் 550 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை சக்சஸ் பார்ட்டி வைத்து படக்குழுவினர் கொண்டாடினார்கள். அதில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.
"விக்ரம்" வெற்றிக்காக அதன் இயக்குனருக்கு கமல்ஹாசன் விலையுயர்ந்த கார் பரிசளித்தார். ஆனால், அதைவிட வசூலைப் பெற்றதாகச் சொல்லப்படும் "ஜெயிலர்" வெற்றிக்காக அதன் இயக்குனருக்கு ரஜினிகாந்த் ஏன் இன்னும் எந்த ஒரு பரிசையும் வழங்கவில்லை என சமூக வலைத்தளங்களில் சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்கள்.
கடந்த வாரம் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, ஜாபர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சனிடம் ரெடின் கிங்ஸ்லி, “வீட்டு வாசல்ல ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்கிறதா கேள்விப்பட்டேன்,” என்று கேட்க அதற்கு நெல்சன், "நடந்தால் சந்தோஷம்,” என்று பதிலளித்திருந்தார். இயக்குனர் நெல்சனுக்கு அந்த சந்தோஷத்தைக் கொடுக்கப் போவது யார் ?.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!