
தாத்தா வழியில் இயக்குனரான நடிகர் விஜய்யின் மகன் : லைகா தயாரிப்பதாக அறிவிப்பு
தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது தான் ஆர்வம். அப்பா விஜய்யை போல் ஹீரோவாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக களமிறங்கி உள்ளார். இவரின் முதல் பட இயக்கத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகாவின் சுபாஸ்கரன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டு ஜேசன் விஜய்யை இயக்குனராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!