
கிங் ஆப் கொத்தா ; முகத்தை மறைத்தபடி முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனிகா
அந்த வகையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள "கிங் ஆப் கொத்தா" திரைப்படத்தில் துல்கர் சல்மானின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் யாரும் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிட முடியாதபடி முகத்தில் மாஸ்க் அணிந்து இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்து ரசித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் நான் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் முதல் படம். தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த படத்தைப் பார்க்கும்போது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன் என்றாலும் ஒரு மிகப்பெரிய படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் அனிகா சுரேந்திரன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!