
முதல் முறையாக செல்வராகவன் குறித்து மனம் திறந்த சோனியா அகர்வால்!
சமீபத்தில் விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி, "இயக்குனராக செல்வராகவன் முரட்டுப்பிடிவாதம் கொண்டவர். ஆனால், சொந்த வாழ்க்கையில் அப்படிபட்டவர் இல்லை, அமைதியானவர். எப்போதும் கதை எழுதிக்கொண்டு தன்னை பிசியாகவே வைத்து இருப்பார். எங்களின் திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பது எனக்கும், அவருக்கும் மட்டுமே தெரியும். இப்போது அவர் செல்லும் வழியில் எப்படி சந்தோஷமாக இருக்கிறாரோ, அப்படி தான் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். அவர் என் கண்களுக்கு நண்பராக தெரிய மாட்டார். காதல் செத்துப்போன பிறகு நண்பராக பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தை பார்க்க மாட்டேன். திருமணம் ஆன புதிதில் நான் நடிக்கக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர். அதனால் சினிமாவை விட்டு ஒதுங்க வேண்டி வந்தது. ஆனால், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளேன்"" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!