
20 லட்சம் மோசடி: யோகிபாபு மீது போலீசில் புகார்
அதன் விபரம் வருமாறு: சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்த ஆசீர் என்பவர் நேற்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் யோகி பாபு மீது புகார் மனு அளித்தார். அதில் அவர் "நான் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். "ஜாக் டேனியல்" என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபுவுக்கு 65 லட்சம் சம்பளமாக பேசி அதில் முன்பணமாக 20 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட யோகி பாபு படத்தில் நடிக்க வராமலும், பணத்தை திரும்ப தராமலும் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!