
தெலுங்கு ‛வாரணம் ஆயிரம் ரீ-ரிலீஸிற்கு கிடைத்த வரவேற்பு - சூர்யா பிரமிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரீ-ரிலீஸானது. இந்த படத்திற்கு இப்போதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இருதினங்களில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் மறுவெளியீட்டிற்கு கிடைத்த வரவேற்புக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த அன்பு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை தருகிறது. படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்(ரசிகர்கள்) என்னை பிரமிக்க வைக்கிறீர்கள்"" என குறிப்பிட்டு, தியேட்டரில் ரசிகர்களுக்கு இந்த படத்திற்கு கொடுத்த வரவேற்பு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!