
தமன்னா எங்கப்பா : டிரைலரைப் பார்த்து டென்ஷன் ஆன ரசிகர்கள்
பொதுவாக ரஜினிகாந்த் படம் என்றால் அவர் முழுமையாக இடம் பெறும் பாடல்தான் முதல் சிங்கிளாக வெளியாகும். ஆனால், "ஜெயிலர்" படத்திற்கு அப்படி நடக்கவில்லை. அதனால், "காவாலா" பாடல் வெளியான போது "ரஜினி எங்கப்பா" என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அப்பாடல் இருந்தது. இப்போது அந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு "ஜெயிலர்" படத்தின் டிரைலர் வெளியானது. அதில் எந்த ஒரு இடத்திலும் தமன்னா காட்டப்படவேயில்லை. "காவாலா" பாடலின் ஒரு வரியும் கூட காணவில்லை. அதே சமயம், "ஹுக்கும்" பாடல் வரிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், ரசிகர்கள் தற்போது "தமன்னா எங்கப்பா" என மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். அது மட்டுமல்ல மலையாள சினிமா ரசிகர்கள் "மோகன்லால் எங்கப்பா" எனவும், கன்னட சினிமா ரசிகர்கள் "சிவராஜ்குமார் எங்கப்பா" எனவும் கேட்டு வருகிறார்கள். அந்தக் கதாபாத்திரங்கள் சஸ்பென்ஸ் ஆனவை என்பதால்தான் டிரைலரில் இல்லை என்றும் சொல்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!