
வெளியீட்டுக்கு முன்பே 150 கோடி வசூலிக்கும் கார்த்தி படங்கள்
நடிகர் கார்த்தி தற்போது மூன்று டங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இயக்குநர் ராஜு முருகன், இயக்கி வருகிறார். அடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்து கொள்ளவிருக்கிறார்.
கார்த்தியின் 27வது படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். அரவிந்த்சாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கார்த்தியின் படங்கள் வெளியீட்டுக்கு முன்னரே 150 கோடி ரூபாய் வசூலிக்கும் நிலையை அடைந்திருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!