
சந்திரமுகி 2 அப்டேட் கொடுத்த கீரவாணி
ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இசையமைக்கும் "சந்திரமுகி 2" படம் பற்றிய அப்டேட் ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.“சந்திரமுகி 2" திரைப்படத்தைப் பார்த்தேன். இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக தூக்கமில்லாமல் உயிரைக் கொடுத்துள்ளேன். குரு கிரண், எனது நண்பர் வித்யாசாகர் ஆகியோருக்கு எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பி. வாசு இயக்கத்தில் 2004ல் கன்னடத்தில் வெளியான "ஆப்தமித்ரா" திரைப்படம்தான் பின்னர் தமிழில் 2005ல் "சந்திரமுகி" யாக வெளிவந்தது. "ஆப்தமித்ரா" படத்திற்கு குருகிரண், "சந்திரமுகி" படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தனர். அந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் இசையமைப்பாளர்களது பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!