
கைமாறிய ஹிரண்ய கசிபு படம் : ராணா மீது கோபத்தில் குணசேகர்
மீண்டும் சமூக, கமர்சியல் படங்களின் பக்கம் இயக்குனர் குணசேகர் கவனத்தை திருப்புவார் என பார்த்தால் மீண்டும் ஹிரண்ய கசிபுவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி புராண படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார் குணசேகர்.. இதற்காக கிட்டத்தட்ட நாலு வருடங்கள் முன்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் குணசேகர். இதிலும் கதாநாயகனாக ராணா நடிப்பதாகத்தான் இருந்தது. பலமுறை இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பின் அப்படியே கிடப்பில் போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராணா இதே ஹிரண்ய கசிபு கதையில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது குணசேகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதை தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் குணசேகர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் கதையை கடவுளை வைத்து உருவாக்கும்போது, கடவுள் உங்களுடைய நேர்மையின் மீதும் ஒரு கண் வைத்து இருக்கிறார் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.. நெறிமுறைக்கு மாறான செயல்கள் நெறிமுறையால் பதிலளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இது நடிகர் ராணாவின் மீதான அவரது கோபத்தின் வெளிப்பாடுதான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!