
துல்கர் சல்மான் வீடியோ ஆல்பம் ஜூலை 25ல் வெளியீடு
இந்த நிலையில் பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். அரிஜித் சிங் என்பவர் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், “கடந்த சில மாதங்களாக மறைத்து வைத்த ஒரு விஷயம் இது.. வரும் ஜூலை முதல் உங்கள் கவனத்திற்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!