
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் தலைகாட்டும் சனுஷா
அதே சமயம் மலையாளத்தில் 2016ல் தான் கடைசியாக இவர் நடித்த படம் வெளியானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சனுஷா. தற்போது ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஊர்வசியுடன் இவர் இணைந்து நடித்துள்ள "ஜலதார பம்பு செட் சின்ஸ் 1962" என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது.
மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மலையாள திரையுலகத்திற்கு திரும்பி உள்ளது குறித்து சனுஷா கூறும்போது, “மலையாள திரையுலகை கடந்த ஆறு வருடங்களாக ரொம்பவே மிஸ் பண்ணினேன். அதே சமயம் ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வருகிறேன். அதிலும் இந்த படத்தில் ஊர்வசியுடன் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார் சனுஷா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!