போக்குவரத்து விதி மீறல் : 500 ரூபாய் அபராதம் செலுத்திய விஜய்
Advertisement
Advertisement
போக்குவரத்து விதி மீறல் : 500 ரூபாய் அபராதம் செலுத்திய விஜய்
ஜூலை 12, 2023
அ நிறம் | அளவு
Advertisement
விஜய் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார். அதற்கான ஆயத்த பணிகளை விரைந்து செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்க கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் நீலாங்கரையில் உள்ள தனது பங்களாவில் இருந்து கூட்டம் நடக்கும் பனையூருக்கு காரில் சென்றார். இதனை பல செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. அப்போது அவர் ஒரு சிக்னலில் நிற்காமல் சென்றது பதிவானது. சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இதனால் விஜய் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றதாக கூறி அந்த பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து அதுதொடர்பான ரசீதை விஜய்க்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அபராத தொகையை விஜய் செலுத்தி உள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!