
அமெரிக்காவில் புராஜக்ட் கே படத்தின் அறிவிப்புகள் வெளியாகிறது
இப்படத்தினை தேசிய விருது பெற்ற "மகாநடி" பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் "புராஜெக்ட் கே" படத்தின் டைட்டில், டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இம்மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் சாண்டியாகோவில் நடைபெறவுள்ள காமிக்கான் என்ற சர்வதேச மாநாட்டில் டைட்டில் மற்றும் டீசர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறோம். உலக ரசிகர்களின் விருப்ப மேடையான காமிக்கான் மேடையில் முதல் முறையாக மேடையேறும் இந்திய திரைப்படம் என்ற பெருமையை "புராஜெக்ட் கேக் படம் பெறுகிறது” என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!