
சலார் டீசர் - மீண்டும் ஒரு கேஜிஎப்?
அதன் பின் "கேஜிஎப் 2" படம் வந்து அது மாபெரும் வெற்றியையும், வசூலையும் பெற்ற பின் "சலார்" படத்தின் மீது இன்னும் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலையில் அப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.
ஆயுதம் ஏந்திய சிலர் முன்பு டினு ஆனந்த், பிரபாஸ் பற்றி பில்டப் கொடுத்துப் பேசும் காட்சி மட்டுமே டீசரில் இடம் பெற்றுள்ளது. “எளிதான…ஆங்கிலத்தில்…."" என அவர் பேச ஆரம்பித்து, “எந்த குழப்பமும் வேண்டாம். யானை, சிறுத்தை, புலி எல்லாமே ரொம்ப ஆபத்தானவை… ஆனா.. ஜூராசிக் பார்க்ல இல்ல… ஏன்னா, அந்த பார்க்ல….அங்க ஒரு……..,” என சொல்லி முடித்ததும் ஆவேசமான பிரபாஸைக் காட்டும் காட்சியிலும், அடுத்து பிரித்விராஜைக் காட்டும் சில வினாடி காட்சியிலும் டீசர் முடிவுக்கு வருகிறது.
அதே கருப்பு நிற பின்னணி, ஆயுதம் ஏந்திய சர்வதேச ரவுடிகள் (?) என "கேஜிஎப்" படத்தின் சாயல் இந்த டீசரிலும் நிறையவே பிரதிபலிக்கிறது. "கேஜிஎப்" படத்தில் அந்த சுரங்கத்தில் இருந்த எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டார் கதாநாயகன். இந்த "சலார்" படத்தில் சர்வதேச எதிரிகளுடன் கதாநாயகன் மோதுகிறாரோ என யூகம் வருகிறது.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராஜ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, கருடா ராம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ரவி பர்சூர் இப்படத்திற்கு இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்கள்.
"பாகுபலி 2" படத்திற்குப் பிறகு "சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ்" என மூன்று பான் இந்தியா படங்களைக் கொடுத்தும் தோல்வியடைந்த பிரபாஸை இந்த "சலார்" சறுக்கல் இல்லாமல் காப்பாற்றுவாரா என்பது செப்டம்பர் 28ம் தேதி தெரிய வரும். தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!