
மாமன்னனை பாராட்டிய மன்னன்
இந்த படம் ரஜினிக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டினார். பின்னர் தனது டுவிட்டரில் “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என்று எழுதியிருக்கிறார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வராஜ், ‛‛என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும், கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்"" என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!