
9 கோடி மோசடி : சுதீப் மீது கன்னட தயாரிப்பாளர் புகார்
இது தொடர்பாக தயாரிப்பாளர் குமார் கூறியிருப்பதாவது : சுதீப் நடிப்பில் புதிய படம் தயாரிக்க முடிவு செய்து 8 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு பேசிய முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன். சுமார் ரூ.9 கோடி வரை கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர் எனது படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கவில்லை. என்னை கைவிட்டு விட்டார்.
ஏற்கனவே அவரிடம் பேசியபோதெல்லாம் எனது படத்தில் நடிப்பதாக தெரிவித்தார். இப்போது அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவருடையை வீட்டுக்கு சென்றால் சுதீப் வீட்டில் இல்லை என்று சொல்கிறார்கள். செல்போன் நம்பரையும் மாற்றி விட்டார். இரு தினங்களுக்குள் எனக்கு முடிவு தெரியவில்லை என்றால் சுதீப் வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டம் நடத்துவேன்"" என்றார்.
சுதீப் மீதான இந்த திடீர் புகார் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!