குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவு ; அம்பலப்புழா கோவிலில் பிரார்த்தனை செய்த நமீதா
ஜூலை 04, 2023
Advertisement
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் கலக்கியவர் "மச்சான்ஸ்" நடிகை நமீதா. ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை அதிகரிக்கவே, பட வாய்ப்புகள் குறைந்தது. அதையடுத்து வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ண ஆதித்யன் மற்றும் கியான் ராஜ் என்கிற இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது ஒரு வயது நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கேரளாவில் உள்ள அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலுக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்து பிரார்த்தனை செய்துள்ளார் நமீதா. இதுகுறித்து அவர் கூறும் போது, “இந்த குழந்தைகள் இருவரும் பிறந்த பின்னர் தான் எங்களது வாழ்க்கையில் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்க ஆரம்பித்தன. ஹேப்பி பர்த்டே டு மை ட்வின்ஸ்.. இதயத்தில் இருந்தும்.. இதயத்துடிப்பில் இருந்தும்..” என்று கூறியுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!