
யோகிபாபுவாக நடித்தது எப்படி?: ஹன்சிகா விளக்கம்
படத்தின் கதை சற்று வித்தியாசமானது. ஆதியும், யோகி பாபுவும் நெருக்கமான நண்பர்கள், ஆதி பலக் லால்வானியை காதலித்து வருகிறார். இந்த நிலையில் ஆராய்ச்சியாளரான பாண்டியராஜனை ஒரு வேலையாக ஆதியும், யோகி பாபுவும் சந்திக்கிறார்கள். அவரது லேபில் நடக்கும் ஒரு கோளாறால் திடீரென யோகிபாபு பெண்ணாக மாறிவிடுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இந்த கதையில் யோகிபாபு மாறிய பெண்ணாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது: இப்படி ஒரு கேரக்டரில் இதற்கு முன் யாராவது நடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நிறைய ஹீரோக்கள் பெண்ணாக நடித்திருக்கிறார்கள் ஹீரோயினரானால் ஆணாக நடித்திருக்கிறேன் ஆணாக வேஷம் போடவில்லை என்றாலும், ஆண்களின் மேனரிஷம் டயலாக் டெலிவரி ஆகியவற்றை முயற்சி செய்திருக்கிறேன்.
யோகி பாபுவின் நடை உடை பாவனைகளை கண்காணித்து அதேபோலவே நடிக்க முயற்சித்து இருக்கிறேன் இந்த படத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம். இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணாகப் பிறந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நான் பெண்ணாக பிறந்ததிலேயே பெருமை கொள்கிறேன். அடுத்த ஜென்மத்தில் கடவுள் ஆணாக படைத்தால் மகிழ்ச்சி.
திருமணத்திற்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை நடிப்பில் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற வித்தியாசம் இல்லை. எனது கணவர் முழு சுதந்திரம் தந்திருக்கிறார். அதனால் தொடர்ந்து நடிக்கிறேன். இனி என்னை அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!