
நல்ல படம் தான் நடிக்கிறேனா? என்று சந்தேகம் வந்தது - அசோக் செல்வன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் மேடையில் கூறியதாவது: "கடந்த வருடம் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. நல்ல படம் என்று அங்கீகாரம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அந்த சமயத்தில் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் தான் நடிக்கிறோமா? என கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் பதிலாக போர் தொழில் படம் அமைந்தது. உன் வேலையை நீ சரியாக செய்தால் உனக்கான மரியாதை தானாக வரும்" இவ்வாறு தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!