கார்த்தியின் சர்தார் 2, மார்ஷல் இந்த வருடமே ரிலீஸ்
ஜூன் 13, 2026
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. அவர் நடித்து இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த "வா வாத்தியார்" படம் படுதோல்வியை சந்தித்தது. 2024ல் வெளிவந்த "மெய்யழகன்" நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை.
கடந்த வருடக் குறையைப் போக்கும் விதத்தில் இந்த வருடத்தில் கார்த்தியின் கணக்கில் மூன்று படங்கள் சேர்ந்துவிடும். அடுத்து "சர்தார் 2" படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து ஒரு வருடமாகிவிட்டது. "வா வாத்தியார்" போல தாமதமாக வெளியிடாமல் இந்தப் படத்தை உடனே வெளியிடுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. அடுத்து "டாணாக்காரன்" தமிழ் இயக்கத்தில் "மார்ஷல்" படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
ஆனால், கார்த்தி குழுவினர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மார்ஷல், சர்தார் 2, கார்த்தி 30" என்றே உள்ளது. அப்படியானால் "மார்ஷல்" படம்தான் முதலில் வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி நடந்தால் "சர்தார் 2" படம் தீபாவளிக்குத் தள்ளிப் போகலாம்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!