
படப்பிடிப்பில் நடிகர் பிருத்விராஜ் காயம்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது ‛விளையாத் புத்தா" என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஜெயன் நம்பியார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மறையூரில் நடந்தது. சண்டைக்காட்சியின் போது அவர் தவறி கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு அவர் ஆபரேஷன் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது ஒருமாதம் வரை அவர் ஓய்வில் இருக்கும் சூழல் உருவாகி உள்ளதாம்.
இதனிடையே அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!