
தனது பாடலை அனிருத் முதலில் பாடியதால் உற்சாக ஆட்டம் போட்ட கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணியின் கொண்டாட்டத்திற்கு காரணமும் இருக்கிறது. மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் தான் இந்த பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலுக்கு ஹிருதயம் புகழ் இசை அமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். விரைவில் வெளிவர தயாராகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்கி உள்ளார்.
தனது பட பாடலை அனிருத் தனது நிகழ்ச்சியின் முதல் பாடலாக பாடியது தான் கல்யாணி பிரியதர்ஷன் உற்சாக கொண்டாட்டத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!