
தாமதமாகும் கமல் படம் : யோகிபாபு படத்தை இயக்க தயாராகும் வினோத்?
அதே சமயம் கமல் அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது திடீரென பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் புராஜெக்ட் கே என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் விரைவில் அவர் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனும் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படத்திற்கு முன்னதாக யோகிபாபுவை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் இயக்குனர் வினோத். இதற்காக யோகிபாபுவிடமும் கதை சொல்லி சம்மதம் பெற்று விட்டாராம். கமல் மட்டுமல்லாது தனுஷிற்கும் கதை வைத்துள்ளதாகவும் அவரை வைத்து படம் இயக்கப் போவதாகவும் வினோத் கூறி வந்த நிலையில் தனுஷும் தற்போது பிசியாக இருப்பதால் யோகி பாபுவை வைத்து படம் இயக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!