
உடல்நலக் குறைவால் அவதிப்படும் சுதாகர்
தற்போது 64 வயதாகும் சுதாகர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையர் தினத்தையொட்டி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் தனது மகனுடன் பங்கேற்று கேக் வெட்டினார். அப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் “பாரதிராஜாவின் அறிமுகத்தால் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா ஜோடியாக நடித்தேன். அதன்பிறகும் ஏராளமான படங்களில் நடித்தேன். பிறகு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் ஆந்திரா வந்து தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தேன். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தேன். தமிழகத்தில் எனக்கு இருந்த நிறைய சொத்துகளை விற்று விட்டேன். தற்போது உடல்நல குறைவால் அவதிப்படுகிறேன். ஆனால் சிலர் நான் மரணம் அடைந்து விட்டதாக தவறான வதந்திகளை பரப்பியபோது மிகவும் வருத்தம் அடைந்தேன்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!