
எந்திரன் பட வழக்கு தள்ளுபடி
இந்த படத்தின் கதை என்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு "இனிய உதயம்" என்ற மாதஇதழில் தான் எழுதிய "திக் திக் தீபிகா" என்கிற கதையைத்தான் ஷங்கர் "எந்திரன்" படமாக எடுத்துள்ளார் என்று தனது வழக்கு மனுவில் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. "திக் திக் தீபிகா" கதையும், "எந்திரன்" கதையும் ஒன்றல்ல, எனவே காப்புரிமை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!