
கமல் கட்சியில் இணைந்த வினோதினி
கடவுளுக்கும் அஞ்ஞானவதிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அந்த பதிவை வெளியிட்டுள்ள வினோதினி, மதத்தின் அடிப்படையில் ஏன் கட்சியில் சேரவில்லை என்று கடவுள் கேட்க, அதற்கு வாரம் ஒருமுறை கள்ள ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செய்யும் கருவிகள் இருப்பதை கண்டுபிடிக்க காசு இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதேபோல் பகுத்தறிவு பேசுற கட்சியில் சேரலையா? என்று கடவுள் கேட்க. "பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேட்குறாங்க" என்று அந்த கட்சிக்காரர்களுக்கே பகுத்தறிவு இல்லை என கிண்டலடித்துள்ளார். இப்படியாக நீண்டுகொண்டே செல்லும் அந்த உரையாடலில் கடைசியில் மைய அரசியல் என்று குறிப்பிட்டு தான் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்திருப்பதை தெரிவித்துள்ளார். வினோதினியின் இந்த நக்கலான பதிவை படிக்கும் பலரும் ஆரம்பமே அமர்க்களமா? என ஜாலியாக கேட்டு வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!