
என்னுடன் நடிக்க நடிகைகள் தயங்கினார்கள் : திண்டுக்கல் லியோனி மகன் சொல்கிறார்
படத்தில் நடித்திருப்பது பற்றி லியோ சிவகுமார் கூறியதாவது: சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிப்பதுதான் என் கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. சீனு ராமசாமி என்னை "மனிதன்" படத்தில் நடிக்க வைத்தார். உதயநிதி "கண்ணை நம்பாதே" படத்தில் நடிக்க வைத்தார். இப்போது இந்த படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறேன்.
இந்த படத்தில் நான் சினிமா வாய்ப்பு தேடும் உதவி இயக்குனர் வேடத்தில் நடிக்கிறேன். என்னை ஒரு பெண் காதலித்து எனது கனவு நிறைவேறும் வரை உடன் வருவார். எங்களுக்கு குழந்தையும் இருக்கும். இப்படியான கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கினார்கள். ஆனால் சஞ்சிதா ஷெட்டி கதையை மட்டும் கேட்டுவிட்டு உடன் நடிப்பது யார்? தயாரிப்பாளர் யார்? என்றெல்லாம் யோசிக்காமல் நடித்தார். என்னை விட சீனியர் நடிகை என்றாலும் என்னோடு இணைந்து எளிமையாக நடித்தார். நடிப்பு தொடர்பான பல விஷயங்களை எனக்கு சொல்லியும் கொடுத்தார் என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!