
தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை
கதாநாயகிகள் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு அவர்களை அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பதுதான் வழக்கமாக இருந்தது. அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. வயதானாலும் பரவாயில்லை இளமையும், அழகும் அப்படியே இருந்தால் கதாநாயகிகளாகத் தொடரலாம் என இயக்குனர்களும், ரசிகர்களும் நினைத்துவிட்டார்கள்
தமிழ் சினிமாவில் 21 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. 2002ம் ஆண்டு "மௌனம் பேசியதே" படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவருக்கு நடுவில் சில வருடங்கள் மட்டும் சிறந்த வெற்றிகள் அமையவில்லை. ஆனால், "96" படம் அவரை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு வந்தது. அடுத்து வெளிவந்த "பொன்னியின் செல்வன் 1, 2" ஆகிய படங்கள் த்ரிஷாவைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அதன் தொடர்ச்சியாக விஜய் நடிக்கும் "லியோ" படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அஜித்தின் "விடாமுயற்சி" படத்திலும், தனுஷின் பெயரிடப்படாத 50வது படத்திலும் அவர்தான் கதாநாயகி என்று தகவல் பரவி வருகிறது.
த்ரிஷாவின் அடுத்த வெளியீடாக "த ரோட்" படம் வெளிவர உள்ளது. மீண்டும் தனது ஆரம்ப கால அலையை த்ரிஷா உருவாக்கி வருகிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!