
அஞ்சலியின் 50வது படம் ஈகை: பர்ஸ்ட் லுக் வெளியீடு
மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான "இரட்ட" படத்தில் நடித்திருந்தார். அஞ்சலி திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது 50வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு "ஈகை" என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். க்ரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தரண் குமார் இசையமைக்கிறார்; பாடல்களை அறிவு எழுதுகிறார். இந்நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றி குடைகள் குழுமியிருக்க நடிகை அஞ்சலி தலையில் சிவப்பு நிற துணி போர்த்தியபடி திரும்பி பார்ப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!