
2023ல் ஐஸ்வர்யா ராஜேஷின் ஐந்தாவது படம் ரிலீஸ்
இதற்கு முன்பு இந்த ஆண்டில் அவர் நடித்த "தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன்" ஆகிய படங்கள் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகின. அடுத்து ஏப்ரல் 14ம் தேதி "சொப்பன சுந்தரி" படமும், மே 12ம் தேதி "பர்ஹானா" படமும் வெளிவந்தன. இந்த மாதத்தில் ஐஸ்வர்யா நடித்து வெளிவரும் இரண்டாவது படம் "தீராக் காதல்".
ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவின் நடிப்பு படத்திற்குப் படம் வளர்ந்து வருகிறது. மற்ற முன்னணி நடிகைகளைக் காட்டிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் தொடர்ந்து பாராட்டைப் பெற்று வருகிறார் ஐஸ்வர்யா. நாளை வெளியாக உள்ள "தீராக் காதல்" படத்திலும் அவரது கதாபாத்திரமும், அதில் அவரது நடிப்பும் சிறப்பாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!