
தீபாவளி போட்டியில் இணைந்த ஜப்பான்
ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கார்த்தியின் 25வது படமாக இது உருவாகி வருகிறது. இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். புதிய போஸ்டருடன் தீபாவளி வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும், யார் "ஜப்பான்"? என்பது பற்றிய வீடியோ அறிவிப்பொன்றையும் இன்று காலை சிம்பு மூலம் வெளியிட்டனர். "ஜப்பான்" மேட் இன் இந்தியா என்ற வசனம் கவனம் ஈர்த்துள்ளது. வித்தியாசமான வேடத்தில் கார்த்தி நடித்திருப்பது அந்த வீடியோவின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி மற்றும் பலர் நடிக்கும் "அயலான்", மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடிக்கும் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" ஆகியவை தீபாவளிக்கு அறிவிக்கப்பட்டுள்ள மற்ற படங்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!