
விடைபெற்றார் டெர்மினேட்டர்
டெர்மினேட்டர் படங்கள் மக்களுக்கு சலித்துவிட்டது என்றும், படங்களின் திரைக்கதை ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இனி டெர்மினேட்டர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்னால்ட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: "டெர்மினேட்டர்" வரிசையின் முதல் மூன்று பாகங்கள் சிறப்பாக அமைந்தது. எனது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அவைகள் காரணமாக இருந்தது. நான்காவது படத்தில், நான் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்ததால் நடிக்கவில்லை. ஐந்து மற்றும் ஆறாவது வரிசை படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் இனி டெர்மினேட்டர் படங்களில் நடிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
அர்னால்ட் சமீபத்தில் "பியூபர்" என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இதில் அவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இது தவிர தற்போது "குங் பியூரி 2" என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு ஓய்வெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!