
விஜய்யின் அடுத்த நகர்வு
இந்தப்படம் எந்தமாதிரியான கதையில் உருவாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு முழு நீள அரசியல் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்தவுடன் அடுத்த 6 மாதங்கள் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்குகிறார் என்கிறார்கள். சமீபகாலமாக விஜய் அரசியல் தொடர்பான விஷயங்களில் தீவிரம் காட்டுகிறார். முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது சிலைக்கு மாவட்டம் தோறும் அவரது மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் வருவதால் அதை நகர்த்தி விஜய் அரசியல் பணிகளில் இறங்குகிறார் என கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!