
மீண்டும் இணைகிறது ‛டான் கூட்டணி
மே 22, 2023
Advertisement
கடந்த ஆண்டு புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் டான். பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் முக்கிய நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்த இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு வந்து, ஒரு சில காரணங்களால் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை கூறியுள்ளாராம் சிபி சக்கரவர்த்த்தி. இப்போது முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். அடுத்த வருடம் இந்த படம் துவங்கும் என்றும், விரைவில் பட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் மாவீரன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!