
விதார்த்துடன் இணைந்த சரத்குமார்
படம் பற்றி இயக்குனர் திருமலை பாலுச்சாமி கூறியதாவது: ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ் கதையே "சமரன்" படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்களா என்பதுதான் கதை.
முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் அதிரடி காட்சிகள். இது படத்தில் பேசப்படுவதாக இருக்கும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!