
50வது நாளில் விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
படம் வெளியான போது விமர்சகர்களின் வரவேற்பும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு அதிகமாகவே இருந்தது. அதே சமயம் படத்தின் கதையைப் பற்றியும், கதாபாத்திரங்களைப் பற்றியும் சில சர்ச்சைகள் எழுந்தது.
பின் ஓடிடி தளத்தில் வெளியான பின் குறுகிய காலத்தில் அதிக நிமிடங்கள் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. ஓடிடியில் வெளிவந்த பின்பும் தியேட்டர்களில் ஓடுவதும் பெருமைதான். இந்த வருடத்திலேயே இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சில காட்சிகளை தற்போது படமாக்கி வருவதாகவும் தகவல்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!