
அலுமினிய ஆடையில் அசத்திய ஐஸ்வர்யா ராய்
அந்த விழாவில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். "தேவதாஸ்" படத்திற்கான திரையிடலில் முதன் முதலில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்து "ரெட் கார்ப்பெட்"டில் அசத்தியுள்ளார்.
"பொன்னியின் செல்வன்" படத்தின் ஆடை வடிவமைப்பாளரான ஏக லகானி வடிவமைத்துள்ள அந்த ஆடை அலுமினியம் மற்றும் கிரிஸ்டல் கலந்து உருவாக்கப்பட்ட ஆடை. சோபி கோச்சர் என்ற நிறுவனத்தின் வெளியீடாக கேன்ஸ் விழாவில் அந்த சில்வர் நிற ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடலை முழுவதுமாக மறைத்திருக்கும் அந்த ஆடையில் ஐஸ்வர்யா ராயின் முகத் தோற்றமும், அவரது கண்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கமெண்ட்டுகளாக நிறைந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!