
கேன்ஸ் பட விழாவுக்கு செல்லும் மிருணாள் தாக்கூர்
இந்த விழாவில் பன்னாட்டு திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பர். அதோடு அவர்கள் அணிந்து வரும் கண்கவர் ஆடைகளும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் இதற்கு முன் பங்கேற்றுள்ளனர். இந்தாண்டு நடக்கும் விழாவில் மிருணாள் தாக்கூர் பங்கேற்கிறார்.
இதுபற்றி மிருணாள் கூறுகையில், ‛‛மிகவும் திரில்லாக உள்ளது. என் திரைவாழ்வுக்கு கிடைத்த பெருமையாக இதை கருதுகிறேன். பல சர்வதேச திரைக்கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பை பெறுவேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!